ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
சென்னையில் கொரோனா பாதிப்பு எந்த பகுதியில் அதிகமாக உள்ளது..
April 3, 2020 • M.Divan Mydeen • மாநில செய்திகள்,

சென்னையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளின் பட்டியலை, மண்டல வாரியாக பெருநகர மாநகராட்சி வெளியிட்டிருக்கிறது.

ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பிராட்வே, ராயபுரம், புதுப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அரும்பாக்கம், அண்ணா நகர், அமைந்தகரை, புரசைவாக்கம் பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட சைதாப்பேட்டை, மாம்பலம் ஆகிய இடங்களில் 6 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி, தண்டையார்பேட்டை,

கொருக்குப்பேட்டையில் 5 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட சாந்தோம், கோடம்பாக்கத்தில் 4 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக, சென்னை மாநகராட்சி பட்டியலிட்டு அறிவித்துள்ளது.