ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
சொத்துக்காக பெண்ணை எரித்துக் கொலை செய்த நிலத்தரகர் கைது
September 18, 2019 • M.Divan Mydeen

சொத்துக்காக பெண்ணைக் கொலை செய்து எரித்துக் கொன்ற பெங்களூரு நிலத்தரகரை சென்னை மடிப்பாக்கம் போலீசார் கைது செய்தனர். மடிப்பாக்கம் ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த விஜயலட்சுமியை கடந்த 4ஆம் தேதி முதல் காணவில்லை என்று மடிப்பாக்கம் போலீசில் அவரது சகோதரர் புகார் அளித்தார். புகாரின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விஜயலட்சுமியின் செல்போனை ஆய்வு செய்த போது பெங்களூருவைச் சேர்ந்த நிலத்தரகர் பாஸ்கர் என்பவருடன் அதிகம் பேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பாஸ்கரைப் பிடித்து விசாரித்த போது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. பெங்களூரு கே.ஆர்.புரத்தில் விஜயலட்சுமிக்குச் சொந்தமாக ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு உள்ளது. அதை விற்பதற்காக அடிக்கடி அவர் அங்கு சென்ற போது பாஸ்கருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, விஜயலட்சுமியின் வீட்டை தனதெனக் கூறி ஒருவரிடம் பணம் வாங்கியதாகவும் அந்த நபர் நெருக்கடி கொடுத்த காரணத்தால், விஜயலட்சுமியை ஏமாற்றி காரில் அழைத்து வந்ததாகவும் பாஸ்கர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அப்போது குளிர்பானத்தில் அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரையை கலந்து விஜயலட்சுமிக்கு கொடுத்ததாகவும், பெங்களூரு சென்றவுடன் அவரை மிரட்டி சொத்தை எழுதி வாங்க திட்டம் போட்டதாகவும் பாஸ்கர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், விஜயலட்சுமி எழவில்லை என்பதால் அவர் உயிரிழந்து விட்டதாக எண்ணி எரித்து விட்டதாகவும் பாஸ்கர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். பின்னர் மடிப்பாக்கம் போலீசார் அளித்த தகவலின்பேரில் கோலார் மாவட்ட பேத்மங்கலம் போலீசார் பாஸ்கரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.