ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
ஜீவசமாதி அடையப்போவதாக கூறிய 80 வயது முதியவரை காண கூட்டம் குவிகிறது
September 12, 2019 • M.Divan Mydeen

சிவகங்கை அருகே முதியவர் ஒருவர் ஜீவசமாதி அடையப் போவதாக அறிவித்துள்ளதையடுத்து அவரை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். சுற்றுவட்டாரமே திருவிழா கோலம் பூண்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் சக்கந்தியை அடுத்த பாசாங்கரை கிராமத்தை சேர்ந்தவர் 80 வயதான இருளப்பசாமி. சிவ பக்தன் என்று கூறப்படும் இவர் திருமணமாகி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜீவ சமாதி அடைய போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இதற்காக 30 நாட்களுக்கு மேலாக விரதம் இருந்து வந்த இருளப்பசாமி இன்று இரவு 12 மணியில் இருந்து நாளை அதிகாலை 5 மணிக்குள் ஜீவசமாதி அடையப் போவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், நீண்ட வரிசையில் நின்று இருளப்பசாமியிடம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்கின்றனர். ஜீவ சமாதி நிகழ்ச்சியை காணவரும் வரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அன்னதானம், குடிநீர், ஆட்டோ உள்ளிட்ட வசதிகளை வழங்கும் பணியிலும் வழிபோக்கர்களுக்கு வசதியாக வண்ணவிளக்குகளை அமைக்கும் பணியிலும் சிவகங்கை, மதுரை, காரைக்குடியைச் சேர்ந்த சிவபக்தர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர் ஜீவ சமாதி அடையும் இடத்தில் குழி தோண்டப்பட்டு பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை பார்க்க பொதுமக்களும் பக்தர்களும் குவிந்து வருவதால் அந்த இடமே திருவிழா கோலம் பூண்டுள்ளது.