ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
டிராக்டர் ஓட்டி விவசாயம்..! 79 வயது தம்பதியின் ஆர்வம்
September 11, 2019 • M.Divan Mydeen

கரூர் அருகே 79 வயதிலும் விவசாய பணியில் ஈடுபட்டு வரும் தம்பதியினர், இந்த வயதிலும் டிராக்டர் ஓட்டி நிலத்தை உழுதும், தண்ணீர் பாய்ச்சியும் சுறு சுறுப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இயற்கை விவசாயமே ஆரோக்கியம் தரும் என்று கூறி, பெருமையுடன் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள தம்பதி பற்றிய செய்தி... கரூர் நகராட்சிக்கு உட்பட்ட வடக்கு காந்தி கிராமம் பகுதியில் உள்ள ராமாகவுண்டனூரைச் சேர்ந்தவர் யோகராஜா வையாபுரி. இவரது மனைவி அம்மையக்காள். பாரம்பரிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள், சிறு வயதில் பெற்றோருடன், நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவது,நாற்று நடுவது போன்ற விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்ததுடன், திருமணமான பின்னரும் இணைந்து விவசாய பணியை தொடர்ந்து வருகின்றனர். இப் பகுதியில் விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகளாக மாறி விட்ட நிலையில், இவர் மட்டும் தனது 10 ஏக்கர் பரப்பளவு நிலத்தை விட்டுத்தராமல், கிணற்றுப் பாசனம் மூலமாக 500 தென்னை மரங்கள், தீ க்குச்சி தயாரிக்க பயன்படும் நூற்றுக்கணக்கான மரங்கள், நொச்சி, அத்தி, மகிளம் உள்ளிட்ட பல்வேறு மர வகைகளையும், வீட்டுக்கு தேவையான காய்கனிகளையும் பயிரிட்டுள்ளனர். தற்போது 79 வயதாகும் நிலையிலும் 30 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய டிராக்டரை கணவர் மூலம் ஓட்டக்கற்றுக்கொண்ட அம்மையக்காள், கீழே தவறி விழுந்து சிகிச்சை பெற்ற பின்பும், தற்போது வரை சுறு சுறுப்புடன் டிராக்டர் ஓட்டி கணவருக்கு உதவி செய்து வருகிறார். இயற்கை முறையில் விவசாயம் செய்து, அதில் வளரும் காய்கனிகளை சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் இந்த வயதான விவசாய தம்பதி.