ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
தங்கக்கழிப்பறைதிருட்டு
September 15, 2019 • M.Divan Mydeen

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சர்ச்சில் வீட்டில் இருந்த தங்கத்தால் செய்யப்பட்ட கழிப்பறை திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.லண்டன் வுட்ஸ்டாக் பகுதியில் உள்ள பெலன்கிம் அரண்மனை, அந்நாட்டு முன்னாள் பிரதமர் சர்ச்சில் குடும்பம் வாழ்ந்த அரண்மனை ஆகும். இந்த அரண்மனையில் கடந்த 2016ம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த கலைஞர் மரிஷியொ கேட்டலன் (Maurizio Cattelan) என்பவர் 18 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட கழிப்பறையை உருவாக்கினார்.சுமார் 40 கோடி ரூபாய் இந்திய மதிப்பு கொண்ட இந்த கழிவறை கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருடப்பட்டது. இதையடுத்து அதனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், அரண்மனையை மூடியுள்ளனர். கழிப்பறை களவு போனது தொடர்பாக அரண்மனையின் பணியாளர் ஒருவரைப் பிடித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.