ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
September 9, 2019 • M.Divan Mydeen

துபாயில் உள்ள நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வது தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 14 நாட்கள் சுற்றுப்பயணத்தின் இறுதி நாளில், துபாய் நகரில் முதலமைச்சர் பல்வேறு தொழில் நிறுவனத்தின் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்க தங்களது விருப்பத்தினை தமிழக முதலமைச்சரிடம் துபாய் முதலீட்டாளர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரக அரசின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக துறையின் கீழ் இயங்கும் பிசினஸ் லீடர்ஸ் போரம் (forum) என்ற அமைப்பும் தொழில் முதலீட்டாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதலமைச்சர் பழனிச்சாமி உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.