ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
தஹில் ரமாணிக்கு 'நோ' கொலிஜியம் அதிரடி..!
September 4, 2019 • M.Divan Mydeen

மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம் செய்தததை மறுபரிசீலனை செய்யக் கோரிய தலைமை நீதிபதி தஹில் ரமாணி செய்த முறையீட்டை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் நிராகரித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டலை நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணி கடந்த 28ந் தேதி மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்த பணியிடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தஹில் ரமாணி சார்பில் கொலிஜியத்திற்கு கடிதம் எழுதப்பட்டது. அந்த கடிதத்தை பரிசீலித்த கொலிஜியம், தஹில் ரமாணியை மேகாலயாவிற்கு பணியிடமாற்றம் செய்த உத்தரவை திரும்ப பெற முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது. மேலும் மேகாலயா நீதிமன்றத்தின் சிறப்பான நிர்வாகத்திற்காகவே தஹில் ரமாணி பணியிடமாற்றம் செய்யப்பட்டதாகவும் கொலிஜியம் கூறியுள்ளது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தற்போது மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே.மிட்டலை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட 1977ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். தொடர்ந்து பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி இவர் 2004ம் ஆண்டு அதே நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி ஜூன் வரை பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த அவர், இந்த ஆண்டு மே 28ஆம் தேதி மேகாலயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தஹில் ரமாணி மேகலாயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.