ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
திருச்சியில் ஆடு கடத்தி வந்த ஆட்டை சப் இன்ஸ்பெக்டர் ஆட்டைய போட்டு விருந்து செய்தால் இடமாற்றம்
July 25, 2019 • M.Divan Mydeen

திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் மாரிமுத்து. சில தினங்களுக்கு முன் இக்காவல் நிலைய போலீஸார் ரோந்துப் பணியில் ருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஆடு கடத்தி வந்த நபர்கள், போலீஸாரைக் கண்டதும் ஆட்டை சாலையில் விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டனர். அந்த ஆட்டைப் பிடித்த ரோந்து போலீஸார், காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்துவிடம் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து, ஆட்டின் உரிமையாளர் குறித்து போலீஸார் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியாத தால், காவல் நிலையத்துக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் ஆட்டைக் கொடுத்து வளர்த்து வந்தனர்.இதற்கிடையே, காவல் நிலையத்துக்கு அருகிலுள்ள பனையடி கருப்பு கோயிலில் கடந்த வாரம் சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீஸார் சார்பில் நடத்தப்பட்ட வழிபாட்டின் போது அந்த ஆட்டை வெட்டி, உணவு சமைத்து அனைவருக்கும் விருந்தளித்தனர்.பொதுவாக, கேட்பாரற்ற பொருட்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டால் அதுகுறித்து 102 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து வட்டாட்சியர் அல்லது கோட்டாட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள், அப்பொருளை ஏலம்விட்டு, அதில் கிடைக்கும் தொகையை அரசிடம் ஒப்படைத்துவிடுவர். ஆனால் அதற்கு மாறாக, திருடர்கள் விட்டுச்சென்ற, கேட்பாரற்ற ஆட்டை முறைப்படி அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல் அதை வெட்டி விருந்து வைத்தது தொடர்பான புகாரின்பேரில், மாவட்ட எஸ்.பி ஜியாவுல் ஹக், சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்துவை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.