ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
திருமணம் ஆன 20 நாளில் தகராறு; கணவனைத் தீயிட்டுக் கொளுத்திய மனைவி கைது
August 3, 2019 • M.Divan Mydeen

விழுப்புரம் திண்டிவனத்தில் தன்னையும், தன் குடும்பத்தையும் தரக்குறைவாகப் பேசிய கணவனைத் தீயிட்டுக் கொளுத்திய மனைவி நேற்று கைது செய்யப்பட்டார் திண்டிவனம் தில்லையாடி வள்ளியம்மை நகரைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மனைவி மாரியம்மா. இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேது (எ) சேதுபதி (25) என்பவரை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இவர், புதுச்சேரியில் பஞ்சர் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் முருகவேணியை அவரது தாயார் குமுதாவிடம் சேதுபதி பெண் கேட்டுள்ளார். தாயாரின் வற்புறுத்தலின் பேரில் முருகவேணி கடந்த 20 தினங்களுக்கு முன்பு சேதுபதியை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு, தினந்தோறும் வேலைக்குச் சென்று வந்த சேதுபதிக்கும், முருகவேணிக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு வேலைக்குச் சென்ற சேதுபதி, நேற்று காலை வீடு திரும்பியுள்ளார். மதியம் 2 மணிக்கு, சேதுபதியும், அவரது மனைவியும் வீட்டில் இருந்துள்ளனர். 3 மணியளவில், சேதுபதி வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருக்கும் போது, வீட்டின் கதவை மூடி தாழ்ப்பாள் போட்டுவிட்டு, முருகவேணி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் வீட்டின் கூரை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில், உள்ளே இருந்த சேதுபதி தீயில் சிக்கிக்கொண்டு வெளியில் வருவதற்குப் போராடியுள்ளார். ஆனால், அதற்குள் தீ கொழுந்து விட்டு எரிந்ததால், அவர் வெளியில் வர முடியாமல், தீயில் சிக்கிக்கொண்டார்.