ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
தொழில்நுட்பமில்லாத காலத்திலேயே தமிழக காவல்துறை முத்திரை பதிப்பு-டிஜிபி
September 10, 2019 • M.Divan Mydeen

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வழக்குகளை புலனாய்வு செய்வதில் தமிழக காவல்துறை எப்போதும் போல் முத்திரை பதிக்க வேண்டுமென்று டிஜிபி திரிபாதி கேட்டுக் கொண்டார். காவல்துறையில் சைபர் குற்றத்தை தடுப்பதற்காக தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. கூடுதல் டிஜிபி வெங்கட்ராமன் தலைமையில் செயல்படும் இப்பிரிவுக்கு, தமிழகம் முழுவதும் தொழில்நுட்ப நுணுக்கம் அறிந்த காவல் துணை ஆய்வாளர்களை பணியமர்த்த ஏதுவாக அவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. அதன்படி, அந்தப் பணிக்கு விண்ணப்பித்த காவல் துணை ஆய்வாளர்கள், அவர்களது திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரிபாதி பேசியபோது, தொழில்நுட்ப வசதியில்லாத காலத்திலேய கைரேகை போன்ற தடயங்களை கொண்டு வழக்குகளை புலனாய்வு செய்ததில் தமிழக காவல்துறை முத்திரை பதித்ததை சுட்டிக்காட்டினார்.