ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
நிருபர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த விவகாரம் பெண் இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராக வேண்டும் மனித உரிமை ஆணையம் உத்தரவு
July 26, 2019 • M.Divan Mydeen

நிருபர்களை  தாக்கி கொலை மிரட்டல் விடுத்த விவ காரத்தில் பெண் இன்ஸ் பெக்டர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதி பதி துரை.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வேப்பூர் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்தில் வருடம் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மாரியம் மன் கோயில் உள் ளதுகோயிலை அதே பகுதியை சேர்ந்த சின்னக்கல்பூண்டி வகையறாவினர் பராமரித்து வந்தனர். இந்நிலையில் கோயிலின் கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்த தால் கோயிலை இடித்து புனரமைக்கும் பணியை தற்போது மேற்கொண்ட னர். ஆனால், இதற்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரி வித்து தடுத்து வந்தனர். இத னால் இரண்டு தரப்பின ருக்கும் ஏற்பட்ட தகராறின் காரணமாக கோயில் விவ காரம் தொடர்பாக நீதிமன் றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்புதடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட டது. அதன் பிறகு தடை உத்தரவு நீக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் மற் றொரு தரப்பினர் கோயி லின் சிலையை எடுத்து பூஜை செய்துள்ளனர், இந்நிலையில், மற்றொரு தரப்பினர் வேப்பூர் காவல் நிலையத்தை முற்றுகை விட்டு மனு வழங்கினர். அதில், கோயில் பிரச்னை குறித்து கோர்ட்டில் வழக்கு நடக்கும் நிலையில், எட்டு பேர் கொண்ட கும்பல் சுவாமி சிலையை திரு டியதாக கூறியுள் ளனர். அப்போது, சப்-இன்ஸ் பெக்டர் சுப்ரமணியன், இது வருவாய் துறை ரீதி யானதாக உள்ளதால் திட்ட டக்குடி தாசில்தாரிடம் முறையிட கூறி உள்ளார். பின்னர், சின்னக்கல்பூண்டி வகையறாவினர் வேப்பூர் காவல் நிலையத்தை முற்று கையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர், அப்போது தொழுதூர் இன்ஸ்பெக்டர் புவனேஸ் வரி வேப்பூர் காவல் நிலையத்தில் பொறுப்பு வகித்துள்ளார். இவர் ஆர்ப் பாட்டம் செய்தவர்களை அசிங்கமாகவும் தரக்குறை வாகவும் திட்டி அங்கிருந்து வெளியேறுமாறு விரட்டி யுள்ளார். இதை நிருபர் கள் படம் எடுத்துள்ளனர்அப்போது அவர்களை படம் எடுக்கக் கூடாதுஎன மிரட்டியுள் ளார்ஆனால் அவர்கள் நாங்கள் செய்தி சேகரிக்க தான் வந் தோம் என கூறியுள்ளனர்அவர்களை அசிங்கமாக திட்டி அவர்கள் கையில் இருந்த கேம் ரா ைவ பிடுங்கி உடைக்க முயற் சித்துள்ளார். தொடர்ந்துஅவர்கள் இருவரையும் விசாரணைக் கைதிகளை உட்காரவைக்கும் அறைக் குள் உட்கார வைத்து ஆபாசமாக திட்டியுள்ளார். இது சம்பந்த மான செய்திகள் கடந்த வாரம் பத்திரிகையில் வெளி வந்தது. மேலும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த நிரு பர் மாநில மனித உரிமை ஆணை யத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அ டிப்படையில் பெண் இன்ஸ் பெக்டர் ஆகஸ்ட் 21ம் தேதி காலை 10.30 மணிக்கு நேரில் அஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையத் தின் நீதிபதிதுரை.ஜெயச்சந் திரன் உத்தரவிட்டுள்ளார்,