ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
நெல்லை நேதாஜி போஸ் மார்க்கெட்டை இடிக்கக் கூடாது - டிராபிக் ராமசாமி
September 16, 2019 • M.Divan Mydeen

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக திருநெல்வேலி நேதாஜி போஸ் மார்க்கெட்டை இடிக்கும் முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வலியுறுத்தியுள்ளார். நெல்லையப்பர் கோவில் அருகே நேதாஜி போஸ் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. நூறு ஆண்டுகள் பாராம்பரியம் மிக்க இந்த சந்தையில் 350 கடைகள் உள்ளன. இந்த நிலையில் காய்கறி சந்தையின் ஒரு பகுதியை இடித்துவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 11 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் சந்தையில் உள்ள கடைகளை காலி செய்யுமாறு வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனைக் கண்டித்து வியாபாரிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக போராட்டம் நடத்தும் வியாபாரிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, நேதாஜி போஸ் மார்க்கெட்டை பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வியாபாரிகளின் வாழ்வாதாரத்திற்கான வழியை உறுதி செய்துவிட்டு கடைகளை காலி செய்யும் நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். உள்ளாட்சி தேர்தல் நடத்தி அதன் மூலம் அமையும் புதிய மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கடைகளை அகற்ற வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி கூறினார். இதை தொடர்ந்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரும் 23-ந்தேதி வியாபாரிகள், குடும்பத்துடன் சென்று ஆட்சியரை சந்தித்து கடைகளை அகற்றக் கூடாது என மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.