ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க குழு - அமைச்சர் கடம்பூர் ராஜு
September 15, 2019 • M.Divan Mydeen

தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். ஆல் மீடியா பிரஸ் கிளப் ஆஃப் தமிழ்நாடுவின் 9ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை, ஜி.ஆர்.டி. ஹோட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜு, விருதுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழகத்தில் அனைத்து பத்திரிகையாளர்களின் நலன் பேணி காக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார். பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்று நலிவுற்ற நிலையிலுள்ள பத்திரிகையாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக தற்போது10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர்,பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் பல்வேறு நலத்திட்டங்களையும் சுட்டிக்காட்டினார். பத்திரிகையாளர் நல வாரியம் குறித்து பேசிய அவர், நல வாரியம் அமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.