ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
பள்ளி, கல்லூரி வாசல்களில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவர் கைது
September 13, 2019 • M.Divan Mydeen

சென்னை பரங்கிமலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 48 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். ஆதம்பாக்கம், பரங்கிமலை சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி, கல்லூரி வாசல்களில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, தனிப்படை போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, பள்ளி, கல்லூரி வாசல்களில் நின்றுகொண்டு மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த பரங்கிமலை இந்திரா நகரைச் சேர்ந்த காமேஷ், ஆலந்தூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 48 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்த போலீசார், போதைப்பொருட்களை இவர்களுக்கு சப்ளை செய்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் விற்பனை செய்தது எந்தமாதிரியான மாத்திரை, அது அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பது தொடர்பாகவும் ஆய்வு நடைபெற்று வருகிறது.