ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை..! கும்பல் கூண்டோடு கைது..!
September 15, 2019 • M.Divan Mydeen

சென்னையில் வாட்ஸ் ஆப் மூலம் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழிர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த கும்பலை காவல்துறையினர் கூண்டோடு கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னையில் பாதாள அறையில் கஞ்சா குடோன் அமைத்து குட்கா மற்றும் கஞ்சா பதுக்கி வைத்து விற்கப்படுவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அந்த கும்பல் கொடுத்த வாக்குமூலத்தில் சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், பள்ளி மாணவர்களுக்கும் கஞ்சா விற்கப்பட்டும் அதிர்ச்சித் தகவல் வெளியானது. இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி அமைந்துள்ள பகுதிகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். அதன்படி கிடைத்த தகவலில், சென்னை அடையாறில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்த மதுரையைச் சேர்ந்த சிங்கராஜ் என்ற நபரை பிடித்து அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர். சிறு சிறு பொட்டலங்களாக தயார் செய்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும், ஐடி ஊழியர்களுக்கும் சப்ளை செய்வதாக வாக்குமூலம் கொடுத்தார். இவர் கொடுத்த தகவலின் படி, மதுரவாயல் பகுதியில் வசிக்கும் பாண்டி, அவரது கூட்டாளிகளான செல்வம், துரை, வரதராஜ் ஆகியோரையும், ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த பிரியலஷ்மி, சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சுப்பிரமணி, அவரது மகன் சூர்யா ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 36 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இந்த கும்பலுக்கு சென்னையில் மட்டும் ஆயிரத்து 400 வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும், இந்த வாடிக்கையாளர்களில் பள்ளி கல்லூரி மாணவர்கள் தான் அதிகம் என்ற அதிர்ச்சி தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர். வாட்ஸ் அப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கஞ்சா விற்று வந்த இந்த கும்பல், 4 நாட்களுக்கு ஒருமுறை 50 கிலோ கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து சென்னையில் விற்று தீர்ப்பதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். கல்லூரி மாணவர்களை மட்டமல்லாமல் பள்ளி படிக்கும் சிறுவர்களையும் கஞ்சா போதைக்கு அடிமையாக்கிய இந்த கும்பல், கஞ்சா போதையில் கழிவறையில் வழுக்கி விழுந்து கை,கால்களை உடைத்து கொண்டதாக கூறப்படுகிறது.