ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
பழனி சித்தநாதன், கந்தவிலாஸ் கடைகளில் சோதனை - ரூ.93.56 கோடிக்கு கணக்கில் காட்டாத வருமானம் கண்டுபிடிப்பு
September 2, 2019 • M.Divan Mydeen

பழனியில் பஞ்சாமிர்தம், விபூதி விற்பனை செய்யும் சித்தநாதன் சன்ஸ் மற்றும் ஸ்ரீ கந்தவிலாஸ் கடைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில்காட்டாத 93 கோடி ரூபாய் வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அந்த நிறுவனங்கள் 40 ஆயிரம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை மொத்த வருமானம் என குறிப்பிட்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்ததை வருமான வரித்துறை சுட்டிக்காட்டி இருக்கிறது. ஆனால் அதற்கு எதிர்மாறாக கடந்த 29 ஆம் தேதி நடைபெற்ற வருமான வரி சோதனையில் 93 கோடியே 56 லட்சம் ரூபாய்க்கு கணக்கில் காட்டாத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொக்கமாக 2 கோடியே 20 லட்சம் ரூபாயும், தங்கம் 56 கிலோ 600 கிராமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.