ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
பாரம்பரிய உணவுகள் குறித்த மதராசப்பட்டினம் உணவுத் திருவிழா
September 15, 2019 • M.Divan Mydeen

பாரம்பரிய உணவுகள் குறித்த மதராசப்பட்டினம் விருந்து என்ற உணவுத் திருவிழாவுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெருகியுள்ளது. நாவில் சுவைநீரை ஊற வைக்கும் உணவு வகைகளை கண்களுக்கு விருந்தாக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.. நாவிற்கு சுவையூட்டி, உடலுக்கு தெம்பூட்டும் உணவு வகைகளுக்கு தமிழர் பாரம்பரியத்தில் பஞ்சமில்லை .ஆனால் நகரமயமாக்கல் காரணமாக பாரம்பரிய உணவு முறைகளில் இருந்து விலகி, மேற்கத்திய உணவுகளை நாடி உடலுக்கு கேடு தேடிக் கொள்கிறோம்.இப்படிப்பட்ட வேளையில் பாரம்பரிய உணவுகளை மீட்டெடுப்பதும், செய்முறைகளை அறிந்து கொள்வதும் அவசியமாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள உணவு திருவிழாதான் . மதராசப்பட்டினம் விருந்து. வெள்ளிக்கிழமை அன்று சென்னை தீவுத்திடலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த உணவுத் திருவிழாவில், 175 அரங்குகள் உள்ளன.மீன் வளம் மற்றும் சுற்றுலாத் துறை அரங்குகளும் இடம்பெற்றுள்ளன. 175 அரங்குகள் முழுவதும் சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் தயாரித்து வைக்கப்பட்டுள்ளன. பணியாரம், கேழ்வரகு ரொட்டி, கோதுமை கொழுக்கட்டை, எண்ணெய் சேர்க்கப்படாத உணவுப் பண்டங்கள், ஆவாரம் பூ சூப், முடக்கத்தான் தோசை, கம்பு தோசை, சிவப்பரிசி கொழுக்கட்டை, இலை அடை, கூழ், தூதுவளை ஊறுகாய், பிரண்டை ஊறுகாய், முடக்கத்தான் ஊறுகாய் என பாரம்பரிய சைவ உணவுகள் எக்கச்சக்கம். அத்துடன் மீன் உணவுகளும் ஏராளம்.உணவுத் திருவிழாவிற்கு திரண்டு வரும் மக்கள், தங்களுக்குப் பிடித்தமான உணவுகளை வாங்கி விரும்பி ருசிக்கின்றனர்.எந்தெந்த வேளைகளில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும், காலை உணவை தவிர்ப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் ஊட்டச்சத்து துறை மாணவிகள் எடுத்துரைக்கின்றனர்.காலை உணவை தவிர்க்கும் இதே சமூகத்தில்தான், தேவைக்கு அதிகமாக உணவை வாங்கி விட்டு அதை வீணடிப்போரும் உள்ளனர். எனவே உணவை வீணடிக்காமல், 90877 90877 என்ற எண்ணிற்கு அழைத்தால் உணவு கிடைக்காமல் அல்லல்படுவோர் எண்ணிக்கை குறையும் என்கின்றனர் நோ ஃபுட் வேஸ்ட் என்ற தன்னார்வ அமைப்பினர்.உணவுத் திருவிழாவின் போது செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இந்த திருவிழாவானது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றார்