ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
பால் மற்றும் கோழி இறைச்சி ஒரே கடையில் விற்கப்படுவதற்கு பாஜக எதிர்ப்பு
September 16, 2019 • M.Divan Mydeen

மத்திய பிரதேச மாநிலத்தில் பால் மற்றும் கோழி இறைச்சியை ஒரே கடையில் வைத்து விற்பனை செய்யும் திட்டத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பில் உள்ள நிலையில், அனைத்து மக்களுக்கும் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் பழங்குடியின பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும், கோழி இறைச்சி மற்றும் பால் விற்பனை செய்யும் திட்டத்தின்கீழ் போபால் பகுதியில் கடையொன்று திறக்கப்பட்டுள்ளது. பழங்குடியின பெண்கள் கூட்டுறவு நிறுவனத்தால் வளர்க்கப்படும் புரதச்சத்து நிறைந்த கோழிகள் வாங்கப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், இத்திட்டத்திற்கு பாஜக சார்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் கமல்நாத்துக்கு கடிதம் எழுதியுள்ள பாஜக எம்.எல்.ஏ., ராமேஷ்வர் சர்மா, கோழி இறைச்சி மற்றும் பால் பொருட்கள் ஒரே கடையில் வைத்து விற்பனை செய்யப்படுவது இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதாகவும், தூய்மையின் அடையாளமாக கருதப்படும் பால் கடவுளுக்கு படைக்கப்படும் நிலையில் பாலுடன் சேர்த்து சிக்கன் விற்பனை செய்வது ஏற்புடையது அல்ல என்றும் கூறியுள்ளார். எனவே இரண்டையும் தனித்தனியாக விற்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு விளக்கமளித்துள்ள கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர், லகான் சிங், ஒரே கடை என்றபோதும் இரண்டுக்கும் இடையே பெரிய தடுப்பு உள்ளதாகவும், இரண்டுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.