ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
பிரியா டீச்சர் அடங்கவே இல்லை....... பழகுபவர், பார்ப்பவர் என எவரையுமே விட்டு வைக்கவில்லை......
February 18, 2020 • M.Divan Mydeen

உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை நெருக்கமாக பழகி உள்ளார்.......

இதை கண்டித்த கணவனை கொலை செய்யவும் முயன்றுள்ளார் டீச்சர்!

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மொட்டலூரை சேர்ந்தவர் பொன்னுரங்கம்.. 46 வயதாகிறது.. இவர் ஒரு விவசாயி... இவருடைய மனைவிதான் பிரியா.. 41 வயது..

காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை......

அதுவும் தமிழ் ஆசிரியையாக வேலை பார்க்கிறார்.......

இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.பிரியாவுக்கு ஸ்கூலில் வேலை பார்க்கும் சில ஆசிரியர்களுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்..

ஒரே ஸ்கூலில் நிறைய ஆசிரியர்கள்.. இவர்களை தவிர, காரிமங்கலத்தை சேர்ந்த இளைஞர்கள், சில அரசியல் கட்சி பிரமுகர்களும் லிஸ்ட்டில் உள்ளனர்........

இந்த விஷயம் பொன்னுரங்கத்துக்கு தெரியவந்ததும் கொதித்து போனார்

மனைவியை பலமுறை கண்டித்தார்.

இதனால் தம்பதிக்குள் சண்டை வந்ததுதான் மிச்சம்.. ஒரு கட்டத்தில் "நீ ஒன்னும் ஸ்கூலுக்கு போக வேணாம்.. பேசாம டிரான்ஸ்பர் வாங்கிடு.. வேற எங்காவது போய்விடலாம்" என்று சொல்லி உள்ளார்.......

இப்படி குடைச்சல் தருவரும், கண்டிஷன் போடுவதும் பிரியாவுக்கு பிடிக்கவே இல்லை......

அதனால் பொன்னுரங்கத்தை தீர்த்துக்கட்டினால்தான் சரிவரும் என்று முடிவு செய்தார்..

இதற்காக ஒரு கூலிப்படையை டீச்சர் பிரியா செட் செய்தார்... 15 நாளைக்கு முன்பு, பொன்னுரங்கம் பெரியாம்பட்டி சென்றபோது, அந்த கூலிப்படையினரை வைத்து கார் விட்டு மோத செய்தார்.. ஆனால், அதில் பொன்னுரங்கம் காயத்துடன் உயிர் தப்பினார்......

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா, அடுத்த பிளான் போட்டார்.. பொன்னுரங்கத்திற்கு மயக்க மருந்து கொடுத்து அவரை வீட்டில் வைத்தே கொல்ல முயன்றார்..

அதை குடித்து பொன்னுரங்கம் வாந்தியெடுத்து மயங்கி விழுந்தாரே தவிர, சாகவில்லை. ராத்திரி 2 மணிக்கு முனகல் சத்தம்.. கையும் களவுமா சிக்கிட்டாங்க..

மாரியம்மாள் கணவர் பரபர வாக்குமூலம்!

இந்த திட்டமும் தோல்வியில் முடிந்தது.. இந்நிலையில் நேற்று முன்தினம், இன்னொரு மாஸ்டர் பிளான் போட்டார்.. அதன்படி வீட்டில் துாங்கி கொண்டிருந்த பொன்னுரங்கனை, கள்ள காதலர்களான சக்திவேல், அருண்குமார் இருவருடன் சேர்ந்து, தலைகாணியால் முகத்தை அமுக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது பொன்னுரங்கம் சுதாரித்து கொண்டார்..

இதனால் கொல்ல வந்த 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.இப்போது பொன்னுரங்கம் உஷார் ஆகிவிட்டார். 3 முறையும் மனைவிதான் தன்னை கொல்ல முயற்சித்தார் என்பதை தெரிந்து கொண்டார்.. உடனடியாக காரிமங்கலம் போலீசில் புகாரும் தந்தார்.....

அதன் அடிப்படையில் பிரியாவிடம் விசாரணை நடத்தப்பட்டது... அப்போது பிரியா 'தான் சிலருடன் நெருங்கி பழகுவது கணவருக்கு பிடிக்கவில்லை.. அதனால்தான் கொலை செய்ய முடிவு செய்ததாக' வாக்குமூலம் தந்துள்ளார்.

இப்போது டீச்சரை கைது செய்துள்ளனர்.. இவருக்கு உடந்தையாக இருந்த மகன் சக்திவேல் 23, அருண் குமார் 24, ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இதை தவிர டீச்சருடன் யார், யாரெல்லாம் நெருங்கி பழகினார்களோ, அவர்களின் லிஸ்ட் எடுக்கவும் முடிவாகி உள்ளது..

கணவரை கொல்ல 3 முறை டீச்சர் முயன்ற சம்பவமும், டீச்சரின் கேடுகெட்ட நடத்தையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கனவருக்கு ஆயுள் கெட்டி போல