ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீஸ் - விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்
September 15, 2019 • M.Divan Mydeen

சென்னை கீழ்ப்பாக்கம் அருகே ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு சொந்தமான ஆட்டோவை சிலர் திருடிச் சென்று விட்டதாகவும், அதை மீட்டுத் தரும்படி காவல்நிலையத்தில் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. கீழ்ப்பாக்கம் தோட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த ராஜேஷ், சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் அயனாவரம் தண்ணீர் தொட்டி ஏ.டி.எம். இயந்திரத்தில் ராஜேஷ் சென்றுள்ளார். அதை நோட்டம் பார்த்த சிலர், ராஜேஷ் எதிர்பாராத நேரத்தில் அவரது கண் முன்னாலேயே ஆட்டோவை திருடிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து டிபி சத்திரம் காவல் நிலையத்தில் ராஜேஷ் புகார் அளித்துள்ளார். புகார் அளித்ததற்கு ஆதாரமாக ராஜேஷிடம் சி.எஸ்.ஆர். நகலை போலீஸார் வழங்கியுள்ளனர். இருப்பினும் ஆட்டோவை மீட்கவோ, அதை திருடிச் சென்ற நபர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவோ இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜேஷிடம் ஆட்டோ திருடிய நபர், அந்த ஆட்டோவை அதே பகுதியில் ஓட்டியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் மீதும் காவல்நிலையத்தில் ராஜேஷ் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் மீதும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், மனமுடைந்த ராஜேஷ், தனது வீட்டுக்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது குடும்பத்தினரும், சக நண்பர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.