ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
பேனர்களைஅகற்றினால்தான்விழாவில் பங்கேற்போம் என கூறிய அமைச்சர்கள்
September 15, 2019 • M.Divan Mydeen

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜியும் செல்லூர் ராஜுவும் தங்களை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றினால்தான் நிகழ்ச்சியில் பங்கேற்போம் எனக் கூறியதை அடுத்து பேனர்கள் உடனடியாக அகற்றப்பட்டன.அருப்புக்கோட்டை காந்திநகரில் ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத் தொடக்க விழா நடைபெற்றது.இதில் பங்கேற்க வந்த அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோரை வரவேற்று வழிநெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. பெட்ரோல் நிலையத்தை திறந்துவைத்த அமைச்சர்கள் இருவரும் அந்த பேனர்களை உடனடியாக அகற்றினால்தான் விழாவில் பங்கேற்போம் என அதிகாரிகளிடம் கூறினர். இதனையடுத்து உடனடியாக பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. அதன் பின்னரே அமைச்சர்கள் விழாவில் பங்கேற்றனர்.