ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி...
September 13, 2019 • M.Divan Mydeen

சென்னை பள்ளிக்கரணையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில், விபத்து நிகழ்ந்த இடத்தில் அனுமதியின்றி பேனரை வைத்திருந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேனரை அச்சடித்த அச்சகம் சீல்வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே விபத்து நிகழ்ந்த போது பதிவலான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ. 23 வயதான இவர் பி.டெக் படித்துவிட்டு, கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பல்லாவரம் - பள்ளிக்கரனை ரேடியல் சாலையில் காமாட்சி மருத்துவமனை அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் சுபஸ்ரீ. அந்த பகுதியில் ஜெயகோபால் என்ற அரசியல் கட்சி பிரமுகர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக சாலையின் நடுவே கட்சி தலைவர்களை வரவேற்று பேனர்களும், கொடிக் கம்பங்களும் டிருந்தன. அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அந்த பேனர்களில் ஒன்று இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ மீது விழுந்ததும், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். வாகனத்துடன் சாலையில் விழுந்த மாணவி மீது பின்னால் வந்த லாரி ஏறியதில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பரபரப்பான சாலையில் நடந்த இந்த விபத்தை நேரில் பார்த்த சக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி கிடந்த அந்த பெண் மீது, விபத்துக்கு காரணமான பேனரும் சுற்றிக் கொண்டிருந்தது. தகவலறிந்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீசார் உடலை மீட்பதற்குள், சாலையின் நடுவே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பேனர் வைத்த அரசியல் கட்சியினர் அதை அவசர அவசரமாக அகற்ற தொடங்கினர். இந்த விபத்து சம்பவம் குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உரிய அனுமதியின்றி பேனர்கள் வைப்பதற்கு பல்வேறு கட்டுபாடுகளை சென்னை மாநகராட்சி சமீபத்தில் விதித்தது. சாலையோரம் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பேனர் வைப்பதற்காக அரசியல் கட்சிகள் மீது சாடிய உயர் நீதிமன்றம் பலமுறை கண்டித்துமிருக்கிறது. உத்தரவுகளை கடுமையாக அமல்படுத்த வேண்டிய அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் இது போன்ற விபத்துகள் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் பேனர் வைத்தவர்கள் மீது, அஜாக்ரதையாக செயல்பட்டு மரணம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், லாரி ஓட்டுனர் ஜேக்கப்பை கைது செய்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் அனுமதியின்றி பேனரை வைத்ததாக அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.