ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
போடப்படாத சாலைக்கு ரூ.24 லட்சம் செலவு... RTI மூலம் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்...
August 31, 2019 • M.Divan Mydeen

மதுரையில் போடப்படாத சாலைக்கு 24 லட்சம் ரூபாய் செலவழித்ததாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. பழங்காநத்தம் சாய்நகரில் நடைபெற்ற சாலை பணிகள் குறித்த விவரங்களை மோகன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டுள்ளார். அதற்கு, கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை பணிக்காக 24லட்ச ரூபாய் செலவானதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த 2015ஆம் ஆண்டு இதே சாலை பணிகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மோகன் கேட்டுள்ளார். அதற்கு, மதுரை மாநகராட்சி சார்பில் 2008ஆம் ஆண்டு கடைசியாக சாலை போடப்பட்டது என்றும் அதன் பின் எந்த ஒரு பராமரிப்பு பணியும் அங்கு நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் இரு வேறு தகவல் கிடைத்துள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மோகன் கோரிக்கை வைத்துள்ளார்.