ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க பொதுமக்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு
September 12, 2019 • M.Divan Mydeen

மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த காலக்கெடுவை நீட்டிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியம், மின்சார வாரியம், ரயில்வே துறை உள்ளிட்ட 15 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், வெள்ள தடுப்பு நடவடிக்கையின் கீழ், 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், கூவம், அடையாறு கால்வாய் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க, அக்டோபர் இறுதி வரை காலக்கெடு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கெடு காலத்தை மேலும் நீட்டிக்கவுள்ளதாகவும் ஆணையர் கூறினார்.