ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
மாமல்லபுரத்தில், மீண்டும் கடைகள் ஆக்கிரமித்து, அவலம் அரங்கேறுகிறது.
October 16, 2019 • M.Divan Mydeen

மாமல்லபுரம்:பிரதமர் - சீன அதிபர் சந்திப்பிற்காக, மேம்படுத்திய மாமல்லபுரத்தில், மீண்டும் கடைகள் ஆக்கிரமித்து, அவலம் அரங்கேறுகிறது. மாமல்லபுரத்தில் உள்ள கலை சிற்பங்களை காண, சுற்றுலாப் பயணியர் குவிகின்றனர். சுற்றுலா சிறப்பிற்கேற்ப, இவ்வூரை, மேம்பாட்டுடன் பராமரிக்க வேண்டும்.ஆனால், சிற்ப பகுதி உள்ளிட்ட இடங்களில், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்படும் கடைகளால், பயணியருக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டது.அரசியல் தலையீடு காரணமாக, உள்ளாட்சி துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதிகாரிகள், நடவடிக்கைக்கு தயங்கினர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங், 11ம் தேதி, மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர்.இதற்காக, சுற்றுலா உள்ளிட்ட பகுதிகளில் இருந்த சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, சாலை சீரமைக்கப்பட்டது.சந்திப்பு நிகழ்வு முடிந்த, சில நாட்களில், சிற்ப பகுதி சாலைகளில், மீண்டும் கடைகள் ஆக்கிரமித்துள்ளன.பேரூராட்சி ஊழியர்கள், சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முயன்றபோது, அவர்களை, ஆக்கிரமிப்பாளர்கள் மிரட்டுகின்றனர். இது ஒருபுறமிருக்க, அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை பகுதி சாலையில், ஆக்கிரமிப்பு ஏற்படாமல் இருக்க, சிற்ப வளாகத்தை ஒட்டி, தொல்லியல் துறை தடுப்பு அமைத்துள்ளது. கடற்கரைக் கோவில் உட்பட மற்ற பகுதிகளில், ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன.