ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
முதல்வர் எடியூரப்பா, வெளியே சொல்ல முடியாத பிரச்னையில் சிக்கி தவித்து வருகிறா
October 7, 2019 • M.Divan Mydeen

கர்நாடக முதல்வர் எடியூரப்பா, வெளியே சொல்ல முடியாத பிரச்னையில் சிக்கி தவித்து வருகிறார். அவர் முதல்வர் பதவியில் இருந்தும், விரும்பிய விஷயங்களை அவரால் செய்ய முடியவில்லை. சமீபத்தில் நடந்த பெங்களூரு மேயர் பதவி தேர்தலுக்கு, எடியூரப்பா ஒருவரை சிபாரிசு செய்தார். ஆனால், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தேசிய தலைவருமான அமித் ஷா, அவரை நிராகரித்துவிட்டு வேறொருவரை வேட்பாளராக அறிவித்தார்; அவர் வெற்றி பெற்று மேயரும் ஆகிவிட்டார்.இதே போல, பெல்லாரி மாவட்டத்தை இரண்டாக்கி, விஜய நகரம் என புதிய மாவட்டத்தை உருவாக்க முடிவெடுத்தார் எடியூரப்பா. ஆனால், பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த, கர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு, மாவட்டத்தைப் பிரிக்க எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு, முதல்வருக்கு எதிராக, அமித் ஷாவிடம் புகாரும் அளித்தார். ஸ்ரீராமுலு, கட்சிக்கு பண உதவி செய்பவர் என்பதால், மாவட்ட பிரிப்பை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட் டுள்ளார் இதனால் எடியூரப்பா கடுமையான நெருக்கடியில் இருப்பதாக சொல்கின்றனர்ஏற்கனவே மோடி எடியூரப்பாவை சந்திக்காமல் புறக்கனித்த அவமானம் நடந்தது.இப்போது அமித்ஷா நெருக்கடி இப்படியே இது தொடர்ந்தால் விரைவில் டெல்லிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அரசியல் சூழல் உருவாகும் என்கின்றனர். இதேமாதிரி அமித்ஷா. இன்னொரு பக்கம், மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிசும் ஒரு பிரச்னையில் சிக்கியுள்ளார். கடந்த, 2014 தேர்தலில், பட்னவிஸ் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த போது, தன் மீதுள்ள இரண்டு வழக்குகளை அவர் தெரிவிக்கவில்லை. இது குறித்து, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்திலும், அமித் ஷாவின் கை இருக்குமோ என, பட்னவிஸ் ஆதரவாளர்கள் சந்தேகப்படுகின்றனர். இந்த விசாரணையால், பட்னவிசுக்கு எந்தப் பிரச்னையும் வராது என்றாலும், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவர் மீதான விசாரணை சரியாக வராது என, அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். அதோடு, மஹாராஷ்டிராவில், ஒரு மராத்தாவை முதல்வராக்க, அமித் ஷா திட்டமிடுகிறார் எனவும் சொல்லப்படுகிறது. பட்னவிஸ் மராத்தா இனத்தைச் சார்ந்தவர் அல்ல. சட்ட சபை தேர்தல் முடிந்ததும், பட்னவிசை மீண்டும் முதல்வராக்காமல், வேறு ஒருவரை முதல்வராக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளார் என, சொல்லப்படுகிறது. இது போன்ற நடவடிக்கைகளால் கட்சிக்குள்ளேயே அமித்ஷாவிற்கு எதிரான அணி உருவாகும் நிலை உருவாகி இருப்பதாக கட்சியினர் சொல்கின்றனர். விரைவில் அமித்ஷாவிற்கு எதிரான குரல் ஒலிக்கும் என்கின்றனர். அமைச்சர் என்கிற அதிகாரத்தை கட்சியினருக்கு எதிராக பயன்படுத்துகிறார் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க மோடி முன்வரவேண்டும் என்றும் சொல்கின்றனர். தனக்கான அணியை அமித்ஷா உருவாக்குகிறார் என்ற சந்தேகத்தையும் எழுப்புகின்றனர். எப்படியோ கட்சிக்குள் குழப்பம் தொடங்கி விட்டது .இது எங்கே போகிறது என பார்ப்போம். என்கின்றனர் டெல்லி தலைவர்கள்.