ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
முதியோர் இல்லத்தில் சேர்த்த மகள்கள்: மீட்டுக் கொடுத்த மதுரை கோட்டாட்சியர்
July 24, 2019 • M.Divan Mydeen

மதுரை அருகே திருநகரில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள வீடு, கார், 90 பவுன் தங்க நகைகளை அபகரித்துவிட்டு பெற்றாரை முதியோர் இல்லத்தில் சேர்த்த மகள்களிடம் இருந்து அவற்றை மீட்டுக் கொடுத்துள்ளார் திருமங்கலம் கோட்டாட்சியர். மேலும், பாதிக்கப்பட்ட முதியவர்களின் மகள்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள திருநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் அழகர்சாமி(வயது 72). இவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவருக்குச் சொந்தமாக ரூ.70 லட்சம் மதிப்புள்ள வீடு, கார், 90 பவுன் நகைகள் இருந்துள்ளன. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள், பெற்றோரிடம் இருந்து வீடு, கார், நகைகளை அபகரித்துவிட்டு, வயதான காலத்தில் அவர்களை அரவணைக்காமல் திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுள்ளனர். வயதான அழ கர்சாமி தம்பதியினர் மகளிடம் இருந்து சொத்துக்களை பெற முடியாமல் தவித்தனர். இந்நிலையில் அழகர்சாமி தம்பதியினர், தங்கள் மகள்கள் சொத்துகளைப் பறித்துக்கொண்டு தங்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டதாக தமிழ்நாடு மூத்த குடிமக்கள் நல ஆணையத்தில் புகார் செய்தனர். மதுரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் முருகேசன் விசாரணை மேற்கொண்டார். அழகர்சாமியின் மகள்களிடம் விசாரித்தார். ஆனால், மகள்களோ சொத்துகளை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை. அதனால், ஒரு வாரத்திற்கு விசாரைணக்கு வருமாறு சொத்துகளைப் பறித்த மகள்களுக்கு கோட்டாட்சியர் முருகேசன் நோட்டீஸ் வழங்கினார்