ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
ரசிகர்கள் யாரும் பேனர்வைக்க வேண்டாம்- நடிகர்விஜய்வேண்டுகோள்
September 15, 2019 • M.Divan Mydeen

ரசிகர்கள் யாரும் தமக்கு பேனர் வைக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த இளம் பெண் சுபஸ்ரீ பேனர் விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தையடுத்து அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல்கட்சிகளும் பேனர் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர யாரும் பேனர் வைக்க வேண்டாம் என்று அறிவித்துள்ளன. இந்நிலையில் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.இந்த விழாவுக்கு ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த யாரும் பேனர் வைக்கக் கூடாது என்று விஜய் வேண்டுகோள் விடுத்திருப்பதாக விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். அரசியல்கட்சிகள் பேனரைத் தவிர்க்க வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் முதல்முறையாக நடிகர்கள் தரப்பில் நடிகர் விஜய் இத்தகைய வேண்டுகோளை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.