ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
ள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்
September 16, 2019 • M.Divan Mydeen

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவைகுண்டம் பேட்மாநகர் பகுதியைச் சேர்ந்த முகமது யூனிஸ் என்பவர் எம்.எம்.மெட்ரிக்குலேஷன் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மெட்ரிக் பள்ளி இயக்குநர் ஆகியோரிடம் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த கல்வி அதிகாரி வசந்தா பள்ளிக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த யூனிஸ், வசந்தா குறித்து மீது பள்ளி கல்வித்துறை இயக்குனரிடம் மேல்முறையீடு செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். பின்னர் தனது கடையில் யூனிஸ் இருந்தபோது அங்கு வந்த 3 பேர் கடையின் கதவை உடைத்ததோடு கல்வி அதிகாரி மீது புகார் தெரிவித்தால் விபரீத விளைவுகள் ஏற்படும் என மிரட்டிச் சென்றுள்ளனர். இதுதொடர்பான புகாரை பாளையங்கோட்டை போலீசார் ஏற்க மறுத்த நிலையில், நெல்லை குற்றவியல் நீதிமன்றம் எண் 1- ல் யூனிஸ் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கல்வி அதிகாரி வசந்தா, பள்ளி தாளாளர் சாகுல்ஹமீது உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து பாளையங்கோட்டை போலீசார் கல்வி அதிகாரி வசந்தா, பள்ளித்தாளாளர் உள்ளிட்ட 5 பேர் மீதும் கொலை மிரட்டல், அத்துமீறி கதவை உடைத்து உள்ளே நுழைந்தது என 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.