ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
விழுப்புரம்:'டாடா ஏஸ்' வாகனத்தில் விதிமுறை மீறி பொதுமக்களை ஏற்றிச்செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
July 26, 2019 • M.Divan Mydeen

விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு, நாள் 'டாடா ஏஸ்' உள்ளிட்ட மினி லாரிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களில் வணிகத்திற்காக பொருட்களை ஏற்றிச்செல்ல மட்டுமே போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது.ஆனால், இந்த வாகனங்கள் அனைத்தும் தற்போது, விதிமுறை மீறி தங்களின் சுய லாபத்திற்காக பொதுமக்களை சவாரி ஏற்றிச்செல்லும் நிலை அதிகரித்து வருகிறது. அப்படி, பொதுமக்களை ஏற்றிச்செல்லும்போது, விபத்து ஏற்பட்டால் பொதுமக்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.எனவே, விதிமுறை மீறி பொதுமக்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.