ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக பல இளைஞர்களிடம் பண மோசடி
September 17, 2019 • M.Divan Mydeen

சென்னையில் 70-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இணைய தளங்களில் வேலை வாய்ப்புக்கு விண்ணபிக்கும் பட்டதாரி இளைஞர்களை குறிவைத்து வெளிநாட்டில் வேலை, கை நிறைய சம்பளம் என ஆசை வார்த்தை கூறி மோசடி செய்யும் கும்பல் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு... சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த என்ற வேலை வாய்ப்பு நிறுவனம் வெளிநாடுகளில் பணிபுரிவதற்கு பொது இணையதளத்தில் விண்ணப்பித்திருந்தவர்களின் தொலைபேசி எண்களை எடுத்து தொடர்பு கொண்டுள்ளனர். மலேசியாவில் படிப்பிற்கு தகுந்தார்போல் பல்வேறு வேலை வாய்ப்புகள் இருப்பதாக அழைப்பு விடுத்துள்ளனர். அதே போல், 3 மாதத்தில் மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாகவும் மேலும் விண்ணப்பிக்க விரும்பினால் தலா 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதை நம்பி 70-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தலா 50 ஆயிரம் ரூபாய் செலுத்தியதாக கூறப்படுகிறது. மூன்று மாதமாகியும் வேலை குறித்த தகவல் கிடைக்காததால், பணம் கட்டிய இளைஞர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு விசாரிக்க வந்துள்ளனர் அப்போது, அலுவலகம் செயல்படாமல் மூடியிருந்ததோடு செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். இதையடுத்து, பணம் கொடுத்து ஏமாற்றப்பட்ட இளைஞர்களில் 30 -க்கும் மேற்பட்டோர் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நிறுவனத்தின் உரிமையாளர் நிருபன் சக்கரவர்த்தி மற்றும் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள் நேர்முகத் தேர்வு போன்று நடத்தி நம்ப வைத்து மோசடி செய்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். டைம்ஸ் ஜாப், நவ்கரி போன்ற வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் இணை தளங்களில் விண்ணப்பித்திருந்த பட்டதாரிகளை குறி வைத்து வெளிநாட்டில் வேலை, கை நிறைய சம்பளம் என ஆசை வலையை வீசியுள்ளனர். வேலை கேட்டு வந்தவர்களிடம் சந்தேகம் வராத அளவில் மலேசியாவின் தூதரக முத்திரையை போலியாக தயாரித்து கடிதம் கொடுத்து ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள மோசடி நிறுவனத்தின் உரிமையாளர் நிருபன் சக்கரவர்த்தியை ஆயிரம் விளக்கு போலிசார் தேடி வருகின்றனர். ஆன்லைனில் வேலைக்காக விண்ணபிக்கும் பட்டதாரி இளைஞர்கள், வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் இணைய தளங்கள் குறித்து நன்கு அறிந்த பிறகே விண்ணபிக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் இது போன்ற மோசடி பேர்வழிகளிடம் சிக்கி பணத்தை இழக்க நேரிடம் என காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.