ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
வேளச்சேரி ஓடும் பஸ்சில் ஓட்டுனர் மரணம் கார் டிரைவரால் தப்பிய பயணியர்
October 6, 2019 • M.Divan Mydeen

வேளச்சேரி:ஓடும் பேருந்தில், ஓட்டுனர் திடீரென இறந்ததால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்தை, கார் டிரைவர்ஒருவர் சாமர்த்தியமாக நிறுத்தியதால், பயணியர் காயமின்றி தப்பினர். சிறுசேரியில் இருந்து கோயம்பேடிற்கு, மாநகர பேருந்து சென்றது. தேனியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணா, 36, என்பவர், பேருந்தை ஓட்டினார். வெங்கடேசன், 52, என்பவர், நடத்துனராக இருந்தார்.பேருந்தில், 15க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். வேளச்சேரி, 100 அடி சாலை, 'சிக்னல்' அருகே பேருந்து சென்றபோது, திடீரென ஓட்டுனர், 'ஸ்டீரிங்' மீது மயங்கி விழுந்தார்.இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சிக்னலுக்காக நின்ற வாகனங்கள் மீது மோதியபடி சென்றது. இதை பார்த்த, சாலையோரம் நின்றிருந்த, மதுரவாயலைச் சேர்ந்த கார் டிரைவரான விஜய், 25, என்பவர், உடனே பஸ்சில் ஏறி, வேகத்தை கட்டுப்படுத்தி பேருந்தை நிறுத்தினார்.இதனால், பேருந்தில் இருந்த பயணியர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.உடனே, ஓட்டுனர் ராஜேஷ்கண்ணாவை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நெஞ்சு வலி ஏற்பட்டு, அவர் இறந்த தகவலை தெரிவித்தனர்.