ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
*தினகரன் நிருபரை காண்டுமிராண்டித்தனமாக தாக்கிய காவலர் பிரின்ஸ் ராயப்பன், தமிழ்நாடு பிரஸ் &மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன்,(3579/CNI),கண்டனத்தையும் பதிவு செய்கிறது
August 21, 2019 • M.Divan Mydeen

https://youtu.be/4_aRwRpn6X0இன்று (21-08-2019 ) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருந்துறை வழியாக ஈரோடு சென்றார்.பெருந்துறை அண்ணா சிலை அருகே முதல்வருக்கு சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாச்சலம் வரவேற்பு அளித்தார். இந்த நிகழ்வை செய்தி சேகரிப்பதற்காக தினகரன் நாளிதழின் பெருந்துறை தாலுகா செய்தியாளர் சிவராஜ், மற்றொரு செய்தியாளருடன் அந்த பகுதியை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். முதல்வருக்கு வரவேற்பு அளிக்கும் இடத்திற்கு 500 மீட்டர் தூரத்தில் அவரது இருசக்கர வாகனத்தை காவல் பணியில் இருந்த அ.பிரின்ஸ் ராயப்பன்(1916) கிரேடு 1 காவலர் தடுத்துள்ளார். அப்போது, தான் தினகரன் நிருபர் என்றும், முதல்வர் வரவேற்பு நிகழ்ச்சியை படம் எடுக்க செல்லவேண்டும் எனக் கூறிய சிவராஜ், தனது அடையாள அட்டையைக் காட்டியுள்ளார். 'எவனாக இருந்தாலும் விட முடியாது' என அவரிடம் கூறிய காவலர் பிரின்ஸ் ராயப்பன், வாகனத்தைத் தடுத்துள்ளார். அப்போது அவருடன் வந்த சக நிருபர், இரு சக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு வா... நாம் நடந்து செல்வோம் என சிவராஜிடம் கூறிவிட்டு நடந்துள்ளார். அதன்படி, சிவராஜ் வண்டியை ஓரமாக நிறுத்த சென்றுள்ளார்.அப்போது காவலர் பிரின்ஸ் ராயப்பன், 'நான் சொல்ல சொல்ல கேட்காமல் வண்டியை எடுக்கிறாயா... என ஆவேசமாகப் பேசியவாறு தினகரன் நிருபர் சிவராஜ் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். பின்னர் அவரது கையால் வைத்திருந்த குடையால், சரமாறியாக அவரது முகத்தில் குத்தியுள்ளார். இதில், அவரது முகத்தில் அணிந்திருந்த கண்ணாடி உடைந்தது. சரமாரியான தாக்குதலால் நிலைகுலைந்து போன அவர், வண்டியை விட்டு விட்டு பாதுகாப்பு தேடி பொதுமக்கள் இருக்கும் பகுதியில் தஞ்சமடைந்தார். (இந்த காட்சிகள் அனைத்தும் அருகில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது) இதன்பின், தினகரன் நிருபர் சிவராஜ், காவலர் பிரின்ஸ் ராயப்பனிடம் தனது அடையாள அட்டையை மீண்டும் காட்டி விட்டு, 'நான் தினகரன் நிருபர். நீங்கள் வண்டியை விடமாட்டேன் எனச் சொன்னதும் ஓரமாக நிறுத்தத்தானே போனேன். அப்போது எதற்காக என்னை அடித்தீர்கள். அடிக்கிற அளவுக்கு நான் என்ன செய்தேன்' என்று அடித்த காவலரிடம் நியாயம் கேட்டுள்ளார். அதற்கு 'ரிப்போர்ட்டர்னா திமிரு பண்ணாதீங்க... போய் என் மேல் கம்ப்ளயிண்ட் கொடுங்க' என்று அலட்சியமாக கூறியுள்ளார். அதோடு, இந்த காட்சிகளை மொபைல்போனில் பதிவு செய்த பத்திரிகையாளர் ஒருவரிடம், 'நல்லா வீடியோ எடுங்க. எடுத்தா நாங்க பயந்து விடுவோமா...' என்று கிண்டலடித்துள்ளார். இதற்கிடையில் அங்கு வந்த பெருந்துறை காவல் ஆய்வாளர் சரவனண், சம்பவ இடத்திற்கு வந்து சிவராஜ் மற்றும் ,காவலர் பிரின்ஸ் ராயப்பனையும் காவல் நிலைத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார். தினகரன் நிருபர் சிவராஜ் காவலர் பிரின்ஸ் ராயப்பனால் தாக்கப்பட்ட கொடுஞ்செயலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. இந்நிலையில் பத்திரிகையாளரை தாக்கிய காவலர் பிரின்ஸ் ராயப்பன் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . எஸ்.சக்தி கணேசனைச் சந்தித்து இன்று மாலை முறையிட்டனர். நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த காவல் கண்காணிப்பாளர் , தினகரன் நிருபர் சிவராஜைத் தாக்கிய ஏட்டு பிரின்ஸ் ராயப்பனை, ஆயுதப்படைக்கு மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். துரித நடவடிக்கை எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் அவர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் நன்றி தெரிவிப்பதுடன் ,பத்திரிகையாளரை தாக்கிய காவலர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.