ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
3-வது முறையாக கொடியேற்றுகிறார் பழனிசாமி சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரம்
August 11, 2019 • M.Divan Mydeen

சென்னை சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நாட்டின் 73-வது சுதந்திரதினம் வரும் 15-ம் தேதி கொண்டாடப் படுகிறது. இதையொட்டி முதல்வர் பழனிசாமி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் உள்ள 120 அடி உயர கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாமறைவுக்குப் பிறகு, கடந்த 2017 பிப்ரவரி 16-ம் தேதி முதல்வராக பதவியேற்ற பழனிசாமி, சென்னை கோட்டை கொத்தளத்தில் 3-வது முறையாக கொடியேற்றுகிறார். இதையொட்டி, கோட்டை கொத் தளம், கொடிக்கம்பம் ஆகியவை வர்ணம் பூசப்பட்டு, மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. சட்டப்பேரவை கட்டிடமும் புதுப்பொலிவுடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. பிரம்மாண்ட மேடை அமைப்பு சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகளை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய பிரதிநிதிகள் பார்ப்பதற்கு வசதியாக கோட்டை கொத்தளம் எதிரே 4 பிரம்மாண்ட மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. முதல்வர் கொடியேற்றுதல் நிகழ்ச்சி முடிந்ததும், முன் னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு விருது, வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வர் நல் ஆளுமை விருது, சிறந்த உள்ளாட்சிக் கான விருது, சிறந்த மாற்றுத் திறனாளிக்கான விருது உட்பட 22 விருதுகளை முதல்வர் வழங்கி கவுரவிக்கிறார். பிறகு, மாற்றுத்திறன் குழந் தைகள் 5 பேருக்கு இனிப்புகள் வழங்குகிறார். இத்துடன் சுதந்திர தின நிகழ்ச்சி கள் நிறைவு பெறுகின்றன. ஒத்திகை நிகழ்ச்சிகள் சுதந்திர தின விழா அணி வகுப்பை பொருத்தவரை, முப்படை வீரர்கள், தமிழக காவல் துறையினர், அதிரடிப் படையினர், குதிரைப்படையினர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டில் இவர்களுடன் ஆந்திர சிறப்பு படையினர் பங்கேற்றது போல, இந்த ஆண்டு கேரள சிறப்பு படையினர் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஒத்திகை 3 முறை நடத்தப்படுகிறது. முதல் ஒத்திகை கடந்த 8-ம் தேதியும், 2-வது ஒத்திகை நேற்றும் நடத்தப்பட் டது. 3-வது ஒத்திகை 13-ம் தேதி நடக்க உள்ளது.