ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
9ம் வகுப்பு படித்த மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிவிட்டு விசாரணைக்கு வரக்கூடாது என மிரட்டல்
August 4, 2019 • M.Divan Mydeen

ராமநாதபுரம் மாவட்டத்தில் 9ம் வகுப்பு படித்த மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிவிட்டு தற்போது விசாரணைக்கு வரக்கூடாது என மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சத்திரக்குடி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அப்பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் கடந்த 2017ல் 9ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது அதே பகுதியில் டிராக்டர் ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.தற்போது காப்பகத்தில் வளர்ந்து வரும் அந்தக் குழந்தை தொடர்பான வழக்கு ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது அந்தச் சிறுமி 11ம் வகுப்பு படித்து வரும் நிலையில் நேற்று பள்ளிக்குச் செல்லும் வழியில் வழிமறித்த 3 பேர் நீதிமன்றம் செல்லக்கூடாது எனக் கூறி மாணவியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பதாக கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்